Breaking News

புது ரேஷன் கார்டு வாங்குவது எப்படி?



  • உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் புதிய ரேஷன்  கார்டு, ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், சேர்த்தல், நகல் அட்டை, வேறு ஊருக்கு மாற்றுதல்  போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் பெரும்பாலோருக்கு புதிய ரேஷன்  கார்டு வாங்க என்னென்ன ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பது  தெரிவதில்லை. 

  • இதோ அதற்கான தகவல்கள்:

    புதிய ரேஷன் கார்டு:  புதிய ரேஷன் கார்டு வாங்க செல்பவர்கள் புதிய குடும்ப அட்டைக்கான  விண்ணப்பம், குடும்ப அட்டை இல்லாததற்கான சான்று, முகவரி ஆதாரங்கள் (வாக்காளர்  அடையாள அட்டை, வீட்டின் சொத்துவரி, மின் கட்டண ரசீது) மனுதாரர் அல்லது அவரது  குடும்பத்தில் உள்ளோரின் பெயரில் உள்ள காஸ் இணைப்பு ரசீது நகல் ஆகியவற்றை  கொண்டு செல்ல வேண்டும்.

    புதிய ரேஷன் கார்டு பெற ரூ.5 கட்டணம். 2 மாதங்களுக்குள் புதிய கார்டு வழங்கப்படும்.

    கார்டு தொலைந்தால்: 
    ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் அதற்கான விண்ணப்ப படிவத்துடன் இருப்பிட ஆதாரச்  சான்றை எடுத்து செல்ல வேண்டும். சான்றுகளை சரி பார்த்த பின் புதிய நகல் அட்டை  மட்டுமே வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.10.

    பெயர் நீக்கம், சேர்த்தல்: 

    ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய வேண்டும் என்றால் குடும்ப தலைவர் விண்ணப்ப  படிவம் மற்றும் ரேஷன் கார்டு கொடுக்க வேண்டும். குடும்ப தலைவர் மரணம்  அடைந்திருந்தால், இறப்பு சான்றுடன் அவரது வாரிசுதாரர் மனு கொடுக்கலாம். பெயர் சேர்க்க  வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட குடும்ப தலைவர் அதற்கான விண்ணப்பிக்க படிவத்தை  அளிக்க வேண்டும்.

    மயிலாப்பூர் மண்டலம்: 
    மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தின் (மயிலை மண்டலம்) கீழ்  மயிலாப்பூர், மாதவபுரம், சாந்தோம், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ஆர்.ஏ.புரம்,  அடையார், சாஸ்திரிநகர், பெசன்ட்நகர், ஆல்காட் குப்பம், இந்திராநகர், கஸ்தூரிபாநகர்,  தரமணி, திருவான்மியூர் ஆகிய பகுதிகள் வருகின்றன.

    விண்ணப்ப படிவங்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை பெறப்படும். தகவல் பெற  044-24642613 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். 
    www.consumer.tn.gov.in
  •  என்ற  வெப்சைட் முகவரியிலும் தகவல் கிடைக்கும்.

No comments