Breaking News

சவூதி உள் நாட்டு அமைச்சகத்தின் புதிய விதி முறை அறிவிப்பு!!


சவூதி உள் நாட்டு அமைச்சகத்தின் புதிய விதி முறை.


சவூதியில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அவர்கள் தொழில் செய்யும் இடங்களில் மட்டும் அல்லாது நடைபாதைகளிலும் சோதிக்கப் படுவார்கள் என்றும், மாற்று இடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும், அதை அனுமதிக்கும் சவூதி ஸ்பான்சர்களும் கடுமையான முறையில் தண்டிக்கப் படுவார்கள் என்றும் செவ்வாய்க்கிழமை நடை பெற்ற சவூதி தொழில் அமைச்சக உயர் மட்ட அதிகாரிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.


முதன் முறையாக கண்டு பிடிக்கப் படும் விதி மீறல்களில் வெளிநாட்டுத் தொழிலாளி திருப்பி அனுப்பப் படுவார். அனுமதித்த சவூதி ஸ்பான்சர் 15,000 சவூதி ரியால் அபராதம் கட்ட வேண்டும். அத்துடன் அவர் ஒரு வருடத்திற்கு புதிதாக யாரையும் வேலைக்கு எடுக்க முடியாது.


இரண்டாவது முறையாக விதி மீறினால் வெளிநாட்டுத் தொழிலாளி திருப்பி அனுப்பப் படுவார். அனுமதித்த சவூதி ஸ்பான்சருக்கு 30,000 சவூதி ரியால் அபராதமும், 3மாதம் ஜெயில் தண்டனையும் விதிக்கப் படும். அத்துடன் அவர் 2 வருடங்களுக்கு புதிதாக யாரையும் வேலைக்கு எடுக்க முடியாது


மூன்றாவது முறையாகவோ, அதற்கும் மேலாகவோ விதி மீறினால் வெளிநாட்டுத் தொழிலாளி திருப்பி அனுப்பப் படுவார். அனுமதித்த சவூதி ஸ்பான்சருக்கு 100,000சவூதி ரியால் அபராதமும், 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதிக்கப் படும். அத்துடன் அவர் 5 வருடங்களுக்கு புதிதாக யாரையும் வேலைக்கு எடுக்க முடியாது


வெளிநாட்டினர் அனுமதித்த காலத்திற்குள் வெளியேறாமல் தங்கினால் முதன் முறை,15,000 சவூதி ரியால் அபராதம், இரண்டாவது முறை 25,000 சவூதி ரியால் அபராதமும் 3 மாதம் ஜெயில், மூன்றாவது முறை 50,000 சவூதி ரியால் அபராமும் 6மாதம் ஜெயில் தண்டனையும் விதிக்கப் படும்


உம்ரா மற்றும் ஹஜ் பயண கம்பெனிகள், தங்களது ஏற்பாட்டில் வந்தவர்களில் யாராவதுஅனுமதித்த காலத்திற்குள் வெளியேறாமல் தங்கி இருப்பதை அரசாங்கத்திற்குத் தெரியப் படுத்த தவறினால் முதன் முறை, 25,000 சவூதி ரியால் அபராதம்,இரண்டாவது முறை 50,000 சவூதி ரியால் அபராதமும், மூன்றாவது முறை 100,000சவூதி ரியால் அபராமும் விதிக்கப் படும்


சவூதியில் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ளவும்.


தகவல் :தி.ரஹ்மத்துல்லா

No comments