தூங்குவதை விட அதிக நேரம் TV, ,கம்ப்யூட்டர் ,மொபைல் போனில் பொழுதை கழிக்கும் மக்கள்-ஆய்வில் தகவல்!
நவீன தொழில்நுட்ப யுகம் மக்களுக்கு பல்வேறு வசதிகளை கொண்டு வந்து சேர்த்த போதிலும் மக்களின் தனிப்பட்ட நேரத்தை அதிகமாக அது திருடிக் கொண்டுள்ளது தெரிகிறது. பணி நேரத்திற்கு பிறகும் தங்களது வேலை தொடர்பான நடவடிக்கைகளில் 60 சதவீதம் பேர் ஈடுபடுகின்றனர். 10 சதவீதம் பேர் படுக்கையில் படுத்தபடியே மொபைலில் படிப்பது, வேலை தொடர்பான மெயில்களை பார்வையிடுவது, அனுப்புவது என ஈடுபடுகின்றனர்.
இதனால் ஒருவர் சுமார் 8 மணிநேரம் 41 நிமிடம் தூங்குகிறார் என்றால், அதை விட அதிகமாக 11 மணிநேரத்திற்கும் மேலாக டிவி, மொபைல், கம்ப்யூட்டர் இவற்றோடு செலவிடுகின்றனர். இதுகுறித்து ஆப்காம் என்ற நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள 2000 பேரிடமும், 800 குழந்தைகளிடமும் ஆய்வு நடத்தி இதை தெரிவித்திருக்கிறது.
கருத்துகள் இல்லை