Breaking News

2வது சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க 25,000 பேர் பதிவு. . .

                           

குன்னூர்: உலக புகழ்பெற்ற நீலகிரி மலை ரயில் 5 பெட்டிகளுடன் ஊட்டியிலிருந்து குன்னூர் வரை தினமும் 5 முறை சென்று வருகிறது. 

                            

இதில் ஒரே நேரத்தில் 300 பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும். இதேபோல் குன் னூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரை மலை ரயில் ஒரு முறை மட்டுமே சென்று வரும். 3 பெட்டிகளுடன் இப்பாதையில் இயக்கப்படும் ரயிலில் ஒரே நேரத்தில் 150 பேர் தான் பயணிக்க முடியும். 

                            

இதன்மூலம் தினமும் 3,300 பேர் ரயிலில் பயணம் செய்யலாம். இதனிடையே, நீலகிரியில் 2வது சீசன் தற்போது கடைபிடிக்கப்படுவதாலும், ஆயுதபூஜை, உள்ளிட்ட தொடர் விடுமுறை வர இருப்பதாலும் மலை ரயிலில் பயணம் செய்ய 25,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.