Breaking News

108 ஆம்புலன்ஸ் உதவியாளர் டிரைவர் தேர்வு..

                                       
சென்னையில் செயல்பட்டுவரும் 108 ஆம்புலன்ஸில் பணிபுரிய மருத்துவ பணியாளர், டிரைவர் வேலைக்கான நேர்காணல் திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனை வளாகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. மருத்துவ உதவி பணியாளர் 30 வயதுக்குட்பட்ட ஆண் / பெண், இளங்கலை 3 வருட அறிவியல் சார்ந்த பட்ட படிப்புடன், பிளஸ் 2வில் அறிவியல் பாடம் பயின்றிருத்தல் அவசியம். 

                           

குறைந்தபட்சம் 1 ஆண்டு அரசு பொது மருத்துவ கல்லூரியில் பயின்றவர்கள் மட்டும் நேர்காணலில் பங்கேற்கலாம்.  

அவசர சிகிச்சை ஊர்தி டிரைவர் பணிக்கு (பைலட் ) 23 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், குறைந்தது 3 வருட அனுபவம். மருத்துவ உதவி பணியா ளருக்கு மாதம் 10,536ம் ஓட்டுனருக்கு 10,091ம் சம்பளம் வழங்கப்படும்.