Breaking News

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்.

                              

நியூயார்க்: பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் (6+)-ஐ, கலிபோர்னியாவில் உள்ள குபர்டினோ நகரில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. 

ஐபோன் என்ற ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. இந்த போன்கள் ஆப்பிளின் ஐஓஎஸ் இன்ற இயங்குதளத்தை அடிப்படையாக வைத்து செயல்பட்டு வருகிறது. இதன் முதல்பதிப்பு கடந்த 2007ம் வருடம் ஜூன் 28ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. பன்முகத்தன்மை கொண்ட இந்த செல்போன்களில் ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 4ஜி வசதிகள், வீடியோ, இமெயில் , வீடியோ கேம்ஸ், வாய்ஸ் மெயில் எனபல வசதிகள் உள்ளன. தற்போது ஐபோன் தலைமுறைகளில், 6வது வெர்சன் வெளியிடபட்டது. 




ஐபோன் 6 மாடல்களை அறிமுகப்படுத்தி, அந்நிறுவனத்தின் சி.இ.ஓ.., பேசுகையில், இன்று ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

இரண்டு மாடல்களும் மெலிதாக இருக்கும். ஐபோன் 6 போனின் டிஸ்பிளே 4.7 இன்ச் என்ற அளவிலும், 6 பிளஸ் போன் டிஸ்பிளே 5.5 இன்ச் என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த போன்களில் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன்கள் மற்ற போன்களை விட 25 சதவீதம் வேகமாக இருக்கும். இந்த போன்கள் வளைவான முனை கொண்டதாக இருக்கும். ஐபோனுக்காக 1.3 லட்சம் அப்ளிகேசன்கள் உள்ளன. 

அதிகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் ஐபோன்கள் தான். 

இன்றைய நாள் ஐபோன்கள் வரிசையில் மிகப்பெரிய சாதனை என கூறினார்.