வங்கி கணக்கு விவரங்கள் பற்றி அறிய அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்-க்கு இனி கட்டணம்.
வங்கிகளில் சேமிப்பு கணக்கு உள்பட அனைத்து வகையான அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கும் பண பரிமாற்றம் நடை பெறும் போது எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வருவது நம்அனைவருக்கு தெரியும். சில நேரம் வாரம் ஒருமுறை சில வங்கிகள் வங்கிக்கணக்கின் இருப்பு தொகை பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வருவது வழக்கம். ஏ.டி.எம்-ல் பணம் எந்நேரமும், எந்த வங்கியிலும் எடுத்துக்கொளும் படி இருந்தது. ஆனால் இப்பொது 5 முறை தான் பிற வங்கியில் இலவசமாக எடுக்கமுடியும் என்ற நிலைமை வந்துள்ளது.
இது கூட பரவாயில்லை, இதுவரை இலவச சேவையாக இருந்து வந்த எஸ்.எம்.எஸ் சேவை குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி உள்ளது. வருகிற 1–ந் தேதி முதல் எஸ்.எம்.எஸ் சேவைக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்ய முடிவு செய்துள்ளனர். அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ்–க்கு இதுவரை வங்கிகளே பணம் செலுத்தி வந்தது. இது கூடுதல் செலவாக கருதப்படுவதால் இனி வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொதுத்துறை வங்கி உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் சேவை என்ற அடிப்படையில் ஒரு எஸ்.எம்.எஸ்–க்கு 50 பைசா வசூலிக்கப்பட உள்ளது. நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 3 மாதங்களுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்படும் என்று தனியார் வங்கிகள் அறிவித்துள்ளது. எஸ்.எம்.எஸ். சேவை தேவை இல்லை என்று வாடிக்கையாளர் கருதினால் விண்ணப்பம் மூலம் எழுதி கொடுத்தால் எஸ்.எம்.எஸ். சேவை நிறுத்தப்பட்டு விடும்.