Breaking News

ஆன்லைனில் மளிகை விற்பனை ஸ்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு..

                                        
உணவு மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் ஆன்லைன் ஸ்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமெரிக்க விவசாய துறை தெரிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் 14ஆக இருந்த ஆன்லைன் ஸ்டோர்கள் எண்ணிக்கை நடப்பு ஆண்டின் செப்டம்பரில் 44ஆக அதிகரித்துள்ளதாக இத்துறை கூறியுள்ளது. 

இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். டெல்லியில் ஆன்லைன் ஸ்டோர் அதிகமாக உள்ளது. அதை தொடர்ந்து பெங்களூர், மும்பை, ஐதராபாத், சென்னை, புனே, கொல்கத்தா, சண்டிகார், திருவனந்தபுரம், கோவை ஆகிய இடங்களில் உள்ளன. 

அருகில் உள்ள மளிகை கடைகள் மூலம் உடனடி சேவை கிடைப்பது மக்களுக்கு எளிதாக உள்ளதால், பொருட்களை விரைவாக கொண்டு சேர்ப்பதுதான் ஆன்லைன் ஸ்டோர்களுக்கு சவாலாக உள்ளதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.