துபாயில் பிரகாசிக்கும் கட்டுமான தொழில்..
உலகின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியான ‘எக்ஸ்போ 2020’ துபாயில், 2020ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஏராளமான புதிய கட்டுமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த வருடம் மட்டும் பல நிறுவனங்கள் மூலம் சுமார் 11 ஆயிரத்து 250 குடியிருப்புகளுக்கு வழிவகுக்கும் 42 புதிய கட்டுமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு விட்டது.
அடுத்த சில ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி மதிப்பில், மிகப்பெரிய கட்டுமான திட்டங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.சமீபத்தில் ‘மால் ஆப் தி வேர்ல்டு’ என்ற பெயரில் 25 பில்லியன் திர்ஹம் மதிப்பில் உலகின் மிகப்பெரிய வணிக மையத்துடன் பூங்கா, செயற்கை அருவி உள்ளடக்கிய முழுவதும் குளிரூட்டப்பட்ட நகரம் அமைக்க அறிவிப்பு வெளியானது.
அதே போன்று பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில், மெய்தான் அவென்யூ , ஸ்டெர்லிங், இண்டிகோ சென் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்த பணிகளில் ஈடுபட உள்ளன.
மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.கட்டுமான பணியில் அதிகளவில் இந்தியர்களே பணியமர்த்தப்படுகின்றனர். எனவே இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. . .