Breaking News

மக்கா,மதினா,மினா உள்ளிட்ட பகுதிகளில் ஹாஜி எங்கிருந்த போதிலும் இந்த அப்ளிகேசன் கூகுள் செயற்கைக்கோள்,சாலை வழிகாட்டி உதவியுடன் அவரை அவரது விடுதிக்கு கொண்டு சேர்த்து விடும்.

                                             
இந்த ஆண்டு இன்ஷா அல்லாஹ் இந்தியாவிலிருந்து சுமார் 136,020 புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இவர்களில் 100,020 பேர் இந்திய அரசின் ஹஜ் கமிட்டி வழியாகவும்,36,000 பேர் தனியார் நிறுவணங்கள் வழியாகவும் புனிதப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

லட்சக்கணக்கானோர் குழுமியிருக்கும் ஹஜ் உடைய நாள்களில் மக்கா,மதினா மற்றும் மினா போன்ற இடங்களில் ஹாஜிகள் பலர் தங்களது தங்குமிடங்களுக்கு செல்லும் வழியை தவற விட்டு அதனை தேடித் திரியும் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதை காண முடியும்.

இது போன்ற சிரமங்களுக்கு விடைகொடுக்கும் விதமாக இந்திய அரசின் ஹஜ் கமிட்டி, நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தி இந்திய ஹாஜிகள் தங்களது இருப்பிடத்தை சரியாக கண்டுபிடித்து வந்தடைவதற்கு வழிகாட்டும் ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் அப்ளிகேசன்களை வடிவமத்துள்ளது.

Indian Haji Accommodation Locator” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த அப்ளிகேசனை ஹாஜிகள் தங்களது ஸ்மார்ட் போன்களில் டவுன்லோடு செய்து அதன் ஐகானை திறந்து ஹாஜியின் அடையாள எண் அல்லது பாஸ்போர்ட் எண்னை திரையில் டைப் செய்த மறு வினாடியே ஹாஜியின் பெயர்,பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட அடிப்படை தகவல்களும்..,
மக்கா,மதினா மற்றும் மினா ஆகிய இடங்களில் இந்த ஹாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தங்கும் விடுதி அல்லது கூடாரம் ஆகியவற்றின் எண், இவரது தங்கும் விடுதிக்கு பொறுப்பாளர் அலுவலகத்தின் எண் உள்ளிட்ட தகவலும் மேலும் இந்த ஹாஜி சவூதிக்கு வந்த தேதி மற்றும் இந்தியாவுக்கு புறப்பட இருக்கும் நாள் உள்ளிட்ட அணைத்து தகவல்களும் திரையில் தோன்றும்.

மக்கா,மதினா,மினா உள்ளிட்ட பகுதிகளில் ஹாஜி எங்கிருந்த போதிலும் இந்த அப்ளிகேசன் கூகுள் செயற்கைக்கோள்,சாலை வழிகாட்டி உதவியுடன் அவரை அவரது விடுதிக்கு கொண்டு சேர்த்து விடும்.

கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்ய :
https://play.google.com/store/apps/details?id=com.cgijeddah&hl=en