அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? இதை படிக்க தவறாதீர் !
கோபம் ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும், அளவுக்கு அதிகமான டென்ஷன், கோபம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
கோபத்தால் விளையக்கூடிய தீமைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன, அதனை தெரிந்து கொண்டு இனிமேல் கோபப்படலாமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
மன அழுத்தம்
அதீத கோபத்தால் மன அழுத்தம் அதிகமாகும், மன அழுத்தம் அதிகமானால் நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தானாக தேடிவரும்.
இதய நோய்
கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், உடலில் ரத்த அழுத்தமானது நார்மலான அளவைவிட அதிகமாக இருக்கும்.
சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.
தலை வலி
எப்போது கோபம் வருகிறதோ அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும்.
மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது. சில சமயங்களில் மூளை வாத நோய் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.
சுவாசக் கோளாறு
சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது.
ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
தூக்கமின்மை
எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும், இதனால் சரியான தூக்கம் கூட வராது.