Breaking News

செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல்: மங்கள்யான் அனுப்பிய‌ புதிய படம்!

                                         
துபாய்: உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி சாதனை படைத்து வரும் இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இருந்து இப்போது மேலும் புதியதொரு படத்தை அனுப்பி உள்ளது. அப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் வடக்கு பகுதியில் புழுதிப்புயல் இருப்பதற்கான படத்தை எடுத்து அனுப்பி வைத்து உள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 74 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி இப்படம்  மங்கள்யான் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. 

அந்த விண்கலத்தில் சக்தி வாய்ந்த கேமரா, செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா? என்பதை கண்டறிவதற்கான கருவி உள்பட 5 முக்கிய கருவிகளை சுமந்து சென்றுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, அங்குள்ள கனிம வளங்கள், வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு உள்ளதா? அங்கு மனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா? என பல்வேறு ஆய்வுகளை  விண்கலம் மேற்கொள்ள உள்ளது.