பேஸ்புக்கால் அதிகரிக்கும் மன அழுத்தம்! – லேட்டஸ்ட் ஆய்வு முடிவு!
சமூக வலைதளமான, ‘பேஸ்புக்’ மூலம், நட்பை துண்டிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக, அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்ததும் அமெரிக்காவின், கொலராடோ டென்வர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம், ஆய்வுநடத்தி, பல விதமான தொடர்புகள் துண்டிக்கப்படுவதை கண்டுபிடித்த போது.
பெரும்பாலானோர், தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்கும் பணிபுரியும் நண்பர்களின் தொடர்பை துண்டித்து உள்ளதாகக் கூறி இருந்ததும் நினைவிருக்கும்!
இதனிடையே அதிக நேரம் ஃபேஸ்புக்கில் செலவழிப்பவர்கள் பலர் மன அழுத்தத்தில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.மேலும், பேஸ்புக் தளத்துக்கு அடிமையாவோர், தனிமை உணர்வால் வாடும் நிலைக்குத் தள்ளப்படும் சூழலுக்கு ஆளாவார்கள் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் நம் அனைவரையும் இணைக்கும் வண்ணம் காட்சியளித்தாலும், அதிக நேரம் பயன்படுத்தினால் ஆபத்தான விளைவுகளை தரக்கூடும் . மூன்று கட்டமாக நடந்த இந்த ஆய்வில், முதல் கட்டமாக 123 ஜெர்மன் பேசும் பேஸ்புக் வாசகர்களைக் கொண்டு ஆராய்ந்தனர்.
பெரும்பாலானவர்கள் பேஸ்புக்கில் சிறிது நேரம் செலவிட்டவுடன் அவர்களின் மனநிலையில் மாற்றம் காணப்பட்டது. (அமேசான் மெகேனிகல் டர்க்) என்ற திட்டத்தின் மூலம் இதன் இரண்டாம் கட்ட ஆராய்ச்சியில் 263 பேர் பங்கேற்றனர்.அதில் பங்கு பெற்றவர்களின் மனநிலையிலும் மாற்றம் காணப்பட்டது.
இந்த ஆராய்ச்சியின் கடைசி கட்டமாக 101 பேஸ்புக் வாசகர்களிடம் ‘பேஸ்புக் பக்கங்களைப் பார்ப்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்குமா அல்லது சோகத்தை உண்டாக்குமா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இந்த கட்டத்திலும் ‘பேஸ்புக்கிலிருந்து வெளிவரும்போது தங்கள் வாழ்க்கையில் தனிமை ஏற்படுகிறது’ என்று வைரல் க்ளோபல் நியூஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கூச்ச சுபாவம் உள்ளவர்கள், பிறரிடம் அதிகம் பேசாத உள்முக சிந்தனையாளர்கள் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதால் தன் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பகிர்வது சிறிதே என்றும் அலபாமா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது என்று இது தொடர்பான ஆராய்ச்சி தகவல்கள் ‘கம்பியூடர்ஸ் இன் ஹுயூமன் பிஹேவியர்’என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.