கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
ஒரு கேரட்டில், நாள் ஒன்றுக்கு தேவைப்படும் சத்துக்கள் எவ்வளவு இருக்கிறது தெரியுமா?
- விட்டமின் -A சத்துக்கள் 210% உள்ளது.
- விட்டமின் கே 10% உள்ளது.
- விட்டமின் சி 6% உள்ளது.
- கால்சியம் 2% உள்ளது.
கேரட்டின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் !
1- கண் பார்வையை மேம்படுத்தும்.
2- புற்றுநோய் வராமல் தடுக்கும் குணம் கேரட்டுக்கு உள்ளது.
3- உடல் செல்களை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.
4- தோலை பளபளப்பாக வைத்துக்கொள்ள கேரட் உதவும்.
5- நோய் தொற்றுக்களில் இருந்து உடலை காப்பாற்றும் ஆன்டிசெப்டிக்காகவும் கேரட் பயன்படுகிறது.
6- இதயம் தொடர்பான நோய்களில் இருந்தும் கேரட் காப்பாற்றக்கூடியது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
7- உடலில் சேரும் நச்சு பொருட்களை அகற்றும் வல்லமை கேரட்டுக்கு உண்டு.
8- சொத்தை பல் வரவிடாமல் தடுக்கும் தன்மையும் கேரட்டுக்கு உள்ளது.
9- வாரத்துக்கு ஆறு கேரட்டாவது சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவு என்கிறது ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆய்வு.
என்ன.. கேரட்ட தேடி கிச்சனுக்கு போறீங்களா.. வாழ்த்துக்கள் !