Breaking News

பார்க்க, ருசிக்க நல்லா தான் இருக்கும் 'புரோட்டா...' - உடலுக்கு ஆபத்துங்கிறது எவ்ளோ பேருக்கு தெரியும்?

                     பார்க்க, ருசிக்க நல்லா தான் இருக்கும் 'புரோட்டா...' - உடலுக்கு ஆபத்துங்கிறது எவ்ளோ பேருக்கு தெரியும்
  
 நகரங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் பட்டி தொட்டியென, புரோட்டா கடைகள் இல்லாத இடமே இல்லை. புரோட்டா, கொத்து புரோட்டா, விருதுநகர் எண்ணெய் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, சில்லி புரோட்டா என, சொல்லும்போதே நாக்கில் எச்சில் ஊறும்......
 
 மேலும் படிக்க : http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21751&ncat=11
நகரங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் பட்டி தொட்டியென, புரோட்டா கடைகள் இல்லாத இடமே இல்லை. புரோட்டா, கொத்து புரோட்டா, விருதுநகர் எண்ணெய் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, சில்லி புரோட்டா என, சொல்லும்போதே நாக்கில் எச்சில் ஊறும். சிக்கன், மட்டன் குருமா, காய்கறி குருமாவோடு அவற்றை ருசிப்பதில், நம்மவர்களுக்கு அலாதி பிரியம் தான்.

விடுமுறை நாள் என்றால், விதவிதமான புரோட்டா கடைகளை தேடி அலையும் இளைஞர்கள் ஏராளம். தமிழகத்தில், அரிசி உணவு போன்று மக்களோடு கலந்து விட்டது புரோட்டா. பார்க்க, ருசிக்க நல்லாதான் இருக்கு... ருசித்து சாப்பிடும் புரோட்டா பிரியர்களுக்கு, அதனால் ஏற்படும் ஆபத்து பற்றி தெரியாது என்பதே உண்மை.


'புரோட்டா சாப்பிடுவது, ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாகும்' என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அப்படி என்ன தான் பிரச்னை... ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்றதை கேளுங்க....
கோதுமையில் இருந்து கிடைக்கும் மைதா மாவில் இருந்து புரோட்டா தயாரிக்கிறோம். ஆனால், மைதாவை எப்படி தயாரிக்கிறாங்கன்னு நமக்கு தெரியாது; அது தெரிஞ்சா பதறிடுவோம்.


கோதுமையை நன்கு தீட்டி மாவு அரைத்தால் அது மைதா. முதலில், அந்த மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பளிச்சின்னு வெள்ளையா மாத்திறதுக்கு, 'பென்சாயில் பெராக்சைடு' (Benzoyl Perozide) எனும் வேதிப் பொருளை கலக்கிறாங்க. இது, தலைமுடியை கருப்பாக்க பயன்படுற, 'ஹேர் டை'யில் சேர்க்கிற நச்சுப்பொருள்.


அத்துடன் மைதா மாவை மிருதுவாக்க, சர்க்கரை வியாதிக்கு மருத்து தயாரிக்கும் ஆலைகளில் பயன்படுத்துற, 'அல்லோக்சான்' (Alloxen) எனும் வேதிப்பொருளையும் கலக்குகின்றனர். இது, சர்க்கரை நோயை உண்டாக்கிற வேதிப்பொருள். இதை சாப்பிட்டா, சர்க்கரை நோய் மட்டுமின்றி, தேவையில்லாத உடல் உபாதைகளும் வரும். மாவு அரைக்க கோதுமையை தீட்டும்போதே, 76 சதவீத வைட்டமின், தாதுப் பொருட்களும் போயிடும்; 97 சதவீதம் நார் சத்தும் போயிடும். நார் சத்து இல்லாத உணவை சாப்பிடுவதால், செரிமானம் ஆகாது. வயிறு பெரிதாகும், இடுப்பின் அளவு கூடும். உடலில், இன்சுலின் சரியாக வேலை செய்யாததால் நிறைய சிக்கல் வரும்.
மைதாவில் புரோட்டோ, கேக்குனு நிறைய வகைகள் செய்றாங்க... வெறும் மைதா, தண்ணியை மட்டும் வச்சு செஞ்சா, பொருள் சுவை கிடைக்காது. 


தயாரிக்கும் உணவுக்கு ஏற்ப, டால்டா, நெய், வெண்ணெய் மற்றும் சுவையூட்டும் பல பொருட்களை சேர்த்தாதான் சுவை கிடைக்கும். சேர்க்கிற பொருட்களாலும் ஆபத்து இருக்கு. கெட்ட கொழுப்பு கூடும். சர்க்கரை நோய், இதய நோய் வரும். இதனால், ஐரோப்பா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகளில் மைதாவில் தயாராகும் பொருட்களுக்கு தடை விதிச்சிட்டாங்க...


நம்ம நாட்டிலயும், நீரிழிவு நோய், இதய நோய் நிபுணர்களும் புரோட்டா சாப்பிடுவதை எதிர்த்துக் குரல் கொடுக்க தொடங்கிட்டாங்க... 'டிவி' விளம்பரங்களை பார்த்து நாம ஏமாந்திடக்கூடாது. இனியாவது நாம விழிப்போடு இருக்கணும்.

                                      

மைதா புரோட்டாவைக் கைவிட்டு, நம் பாரம்பரியமான கேப்பை, கம்பு, சோளம், வரகு, திணை உணவுகளே சிறந்தது என்பதை, 
இப்போதாவது நாம உணர்ந்தாக வேண்டும். இதுதான் நமக்கு நல்லது என, நீண்ட விளக்கம் தருகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.