உலகிலேயே இந்தியாவில்தான் விமான கட்டணம் குறைவு; ஆய்வில் தகவல்!
சிட்னி,
ஆஸ்திரேலியாவின் முன்னணி பத்திரிகையான சிட்னி மார்னிங் ஹெரால்டு உலக அளவில் விமான கட்டணங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தது. அவற்றின் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.
அதில், உலகிலேயே மிகவும் குறைந்த விமான கட்டணத்தில் பயணம் செய்ய ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
மலேசியா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பி்டுகையில் இந்தியாவில் 100 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்ய வெறும் 10.36 டாலர்களே செலவாகிறது. ஆனால், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, போன்ற நாடுகளில் இதே 100 கி.மீ. தூரம் பயணம் செய்வதற்கு 139.90 டாலர்கள் வரை செலவாகின்றன. அதிக விமான கட்டணம் உள்ள நாடுகள் பட்டியலில் லிதுவானியா, ஆஸ்திரியா, எஸ்டோனியா போன்ற நாடுகள் உள்ளன.
இந்தியாவைப் போலவே தென் ஆப்பிரிக்காவிலும் விமா
எனினும், இந்தியாவில் சமீபகாலமாக ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்கள் ஆச்சர்யப்படும் வகையில் ரூ.100, ரூ.500 என கட்டண சலுகையை அவ்வபோது அள்ளி வீசி வருவது குறிப்பிடத்தக்கது.