டி.என்.பி.எல். நிறுவனத்தில் பணி வாய்ப்புகள்!
டி.என்.பி.எல். என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு நியூஸ்பிரின்ட் அன்ட் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில், பல்வேறு நிலைகளில் மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பல்வேறு பணிப் பிரிவுகளில், துணை பொது மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகள் உள்ளன.
ஒவ்வொரு பணிக்கும் தேவையான படிப்பு, வயது மற்றும் அனுபவம் ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி அக்டோபர் 16.
இதர விபரங்கள் அனைத்தையும் அறிய http://www.tnpl.com/careers.aspx.