Breaking News

இனிமேல் ஜெயலலிதாவால் ஆட்சிக்கு வரவே முடியாது.. கருணாநிதி பரபரப்பு பேச்சு!

                                          இனிமேல் ஜெயலலிதாவால் ஆட்சிக்கு வரவே முடியாது.. கருணாநிதி பரபரப்பு பேச்சு!
நம்மை மறைக்க வந்த மாயை அகற்றப்பட வேண்டும் என்று நாம் கருதினோமோ, அதிலே நாம் எதிர்பாராத அளவில் அந்த அம்மையாரே முடித்து வைத்து நமக்கு நன்றி காட்டியிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய வழக்கு - எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய் சுரண்டப்பட்ட இந்த வழக்கில் இனி மேல் தப்பித்து வந்து இந்த அம்மையார் ஆட்சிப்பீடத்திலே அமரலாம், தமிழ்நாட்டு மக்களை மீண்டும் மடையர்களாக ஆக்கலாம் என்று கருதினால், அது வெறும் கனவு தான், அந்தக் கனவு பலிக்காது, பலிக்காது என்பதை அண்ணாவின் மீது ஆணையாக, நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை மீது ஆணையாக நான் சொல்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கருணாநிதி பேசிய பேச்சு இது. கருணாநிதியின் பேச்சிலிருந்து....

அவராகவே சிக்கிக் கொண்டார் பேரறிஞர் அண்ணாவும், நாமும் உருவாக்கிய திராவிட இயக்கம் என்ற இந்த இயக்கத்தினுடைய நிழலில் தன்னை வளர்த்துக்கொண்டு இந்த இயக்கத்தையே ஒழித்து வீழ்த்துகின்ற வகையிலே ஜெயலலிதா செயல்பட்டு, இதற்கு முடிவே கிடையாதா என்றெல்லாம் அனைவருமே ஏக்கத்தோடு, பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அவர்களாகவே வலையில் சிக்கிக்கொண்டு இன்றையதினம் திராவிட இயக்கத்தை நாம் தூக்கி நிறுத்துவதற்கு தங்களை அறியாமல் துணையாக வந்து விட்டார்கள் என்று கண்கூடாக காணுகின்ற ஒன்றாகும். ஈடேறிய நமது லட்சியம் அதற்காக நாம் பெருமுயற்சி செய்தோம் என்று நான் சொல்ல விரும்பவில்லை. 

அதற்காக எவ்வளவு கஷ்டங்களை ஏற்றுக்கொண்டோம், எந்தெந்த கட்சிகளோடு உடன்பாடு கொண்டோம் என்றெல்லாம் நான் விளக்கவும் விரும்பவில்லை. அது தேவையும் இல்லை. ஆனால் நாம் எந்த ஒரு எண்ணம் வெற்றி பெற வேண்டும், லட்சியம் ஈடேற வேண்டும், நம்மை மறைக்க வந்த மாயை அகற்றப்பட வேண்டுமென்று கருதினோமோ, அதிலே நாம் எதிர்பாராத அளவில், அந்த அம்மையாரே முடித்து வைத்து நமக்கு நன்றி காட்டியிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அண்ணாவுக்கே குழி தோண்டப் பார்த்தவர் எந்த அண்ணாவின் பெயரால் அந்த இயக்கத்திற்கு அவர்கள் பெயரிட்டார்களோ, அண்ணா திமுக என்று, அந்த அண்ணாவுக்கே குழி தோண்டுகிற வகையில், அந்த அண்ணாவையே அவமதிக்கின்ற வகையில் நடந்து கொண்டதன் பலனை இன்றைக்கு அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூடச் சொல்லலாம். 

நம்மைப் பார்த்து தீய சக்தி என்று சொன்ன ஜெ. நம்மையெல்லாம் பார்த்து ‘‘தீயசக்தி'' என்று சொல்கின்ற அளவுக்கு, அந்த அம்மையார் தன்னை உருவாக்கிக்கொண்ட இந்த காலகட்டத்திலே தான், அவருடைய வீழ்ச்சியை அவரே இன்றைக்குப் பாடமாகப் படிக்கின்ற ஒரு நிலை உருவாகியிருக்கின்றது. ஊமை நாடகம் முடிந்தது ஏனோ தானோக்கள், இளித்தவாயர்கள், அப்பாவி பொது மக்கள் ஏதோ ஒரு மகாசக்தி அவதாரம் எடுத்து, தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்களையெல்லாம் காப்பாற்ற வந்திருக்கிறார் என்று தவறாக கருதிக்கொண்டு, அப்படி அவர்கள் கருதியதை ஜெயலலிதாவும் உருவாக்கி அவரால் பலன் பெற்றவர்கள், பதவி பெற்றவர்கள், அப்படி செய்தால்தான் அந்த அம்மையாரை வைத்து காலம் தள்ள முடியும், பிழைக்கமுடியும், வாழ முடியும் என்கின்ற அந்த ஒரே எண்ணத்தோடு நடைபெற்ற நாடகம்தான் இன்றையதினம் முடிவுக்கு வந்திருக்கிறது என்று சொன்னால், அதுமிகையாகாது. எனக்குக் கூட பரிதாபம் ஏற்பட்டது ஆம் நாடகம் தான்; அவர்களாகவே முடித்துக்கொண்ட நாடகம். எனக்கு கூட கொஞ்சம் பரிதாப உணர்வு ஏற்பட்டது. ‘‘உனக்கு இது தான் வேலை, இப்படி எதிரிகளைப் பார்த்து பரிதாபப்படுவதே வேலை'' என்று நீங்கள் நினைத்துக்கொள்வது எனக்கு புரிகிறது. ஆனால் அப்படித் தான் நடந்திருக்கிறது, இன்றைக்கு இந்த நாட்டரங்கில் நடைபெற்று முடிந்த இந்த சோகக்கதை. 

நம்பிக்கை தகர்ந்தது நேற்று வரையில் ‘‘மகாராணி'' என்றும், ‘‘மகாகாளி'' என்றும், ‘‘அவருக்கு ஈடாக யாரும் பிறக்கவில்லை, அவர் தான் சர்வ சக்தி வாய்ந்தவர்'' என்று நம்பிக்கொண்டிருந்த மக்கள் அதை நிரூபிப்பதற்காக நம் மீது பாய்ந்து பிறாண்டிய பக்தக்கோடிகள், தோழர்கள் இவர்கள் எல்லாம் இன்றைக்கு உண்மையை உணர்ந்து ஊமைகளாகத் தான் இருக்கிறார்கள். பாம்பை அடித்தால் மட்டும் போதாது அந்த ஊமை நாடகத்தை இன்னமும் தோல் உரித்துக்காட்ட வேண்டுமென்பதற்காகத்தான், பாம்பை அடித்தால் போதாது, துரத்தினால் போதாது, விரட்டினால் போதாது, அது நமக்கு பயந்து கொண்டு வேலி ஓரத்தில் பதுங்கிக் கொண்டால் போதாது, அதைப் பிடித்து, அதனுடைய நச்சுப்பையை பரவ விடாமல் தடுக்கின்ற அந்தப் பணியைச் செய்ய வேண்டும். பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நாம் மாவட்டக்கழகச் செயலாளர்களின் கூட்டம் இது. 

மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு என்று பல பணிகள் உண்டு. மாவட்டக் கழகமே எதிர் காலத்திலே உரு மாற இருக்கிறது. அப்படி உருவாகின்ற மாவட்டக் கழகம், இதை விட இன்னும் வேகமாக, இன்னும் விஸ்தாரமாக, இதைவிட இன்னும் வலிமையாக, இதை விட இன்னும் ஆக்கபூர்வமாக அமையக்கூடும். அப்படிப்பட்ட அந்த முயற்சிக்கு நாங்கள் எடுத்திருக்கின்ற இந்தப் பணி பயன்படும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் உங்களுக்கு நான் சொல்கிறேன். இன்னும் பலமாக வேண்டும் தலைமைக் கழகத்தைப் பொறுத்தவரையில், கட்சியிலே ஒரு சில அமைப்பு முறைகள் இன்னும் சிலாக்கியமாக ஆக்கப்பட வேண்டும், இன்னும் ஸ்திரமாக உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனைகளை உங்களைப் போன்றவர்களிடம் கேட்டுக்கேட்டு, அதனைச் சிந்தித்து சிந்தித்து, அதற்கான வழிமுறைகளை எல்லாம் தேர்ந்தெடுத்து, முத்தாய்ப்பாக சில கருத்துகளை வெளியிடவும், அதைச் செயல்படுத்தவும் நானும், நம்முடைய பொதுச்செயலாளர் பேராசிரியரும், கழகத்தின் பொருளாளர் தம்பி ஸ்டாலினும், மற்றுமுள்ள தலைமைக்கழக நிர்வாகிகளும் யோசித்துக்கொண்டிருக்கிறோம். 

யங்கரமான புயலைத் தாண்டி விட்டோம் அது வேறு. அதே நேரத்தில் இன்றைக்கு இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டவர்கள் ஆற்றிய உரைகளைப் பார்க்கும்போது திராவிட முன்னேற்றக்கழகம் கட்டுப்பாடான ஒரு இயக்கம், ஏற்பட்ட பயங்கரமான ஒரு புயலை அடித்துத் தள்ளி, இந்தப் புயலை கடந்தவர்கள் நாம், எதிர்காலத்திலே இந்தக் கழகத்தை வளர்ப்பதற்கான ஆற்றலை, வலிவை பெருக்கிக்கொள்ளக் கூடிய வாய்ப்பு பெற்றவர்கள் நாம் என்பதையும் உங்களுக்கு நான் அறுதியிட்டுக் கூற விரும்புகிறேன். இயக்கத்தைக் காக்க வேண்டும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏதோ தேர்தலுக்காக வளர்க்கப்படுகின்ற ஒரு கட்சி என்றில்லாமல், இது சமுதாயத்திற்காக, திராவிட இனத்திற்காக, திராவிட உணர்வை வலுப்படுத்துவதற்காக உள்ள இயக்கம். இன்றில்லாவிட்டாலும் இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுக்காலத்திற்கு பேர் சொல்லப்படவேண்டிய ஒரு இயக்கம், அதைக் காப்பாற்றித்தீரவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது, இல்லாவிட்டால் எதிர்காலம் நம்மை சபிக்கும், அந்த சாபத்திற்கு நாம் ஆளாகாமல், திராவிடப் பயிரை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் பேராசிரியர் இங்கே பேசினார். 

அழிக்க நினைத்தாலும் இனி முடியாது திராவிட இயக்கத்தினுடைய வளர்ச்சியை இடையிலே வந்த ஜெயலலிதா போன்றவர்கள் அழிக்க நினைத்தாலும், அழித்து விட முனைந்தாலும், நாம் அதைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள், தடுத்து நிறுத்தியே தீருவோம், அதற்காக நாம் நம்முடைய ஆயுளையே தர வேண்டியிருந்தாலும், இந்த கருணாநிதியைப் பொறுத்தவரையில், பேராசிரியர் அன்பழகனைப் பொறுத்தவரையில், தம்பி ஸ்டாலினைப் பொறுத்தவரையில், அதற்கு நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம் என்பதை உங்களுக்கெல்லாம் இந்த நேரத்தில் வீர சபதமாக நான் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ஜெயலலிதா இனி ஆட்சிக்கே வர முடியாது இப்போதும் சொல்கிறார்கள். நாங்கள் மேல் முறையீடு செய்து வெற்றி பெற்று விடுவோம் என்று சொல்கிறார்கள். ‘‘அப்பீலில்'' வெற்றி பெற்றால் நாமும் வாழ்த்துவோம். ஆனால் அது கேள்விக்குறி என்பதை மாத்திரம் அவர்களுக்கு மாத்திரமல்ல, உங்களுடைய நினைவுக்கும், நெஞ்சுக்கும் நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். 

இனி ஜெயலலிதாவின் கனவு வெறும் கனவாகவே முடியும் இவ்வளவு பெரிய வழக்கு - எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய் சுரண்டப்பட்ட இந்த வழக்கில் இனி மேல் தப்பித்து வந்து இந்த அம்மையார் ஆட்சிப்பீடத்திலே அமரலாம், தமிழ்நாட்டு மக்களை மீண்டும் மடையர்களாக ஆக்கலாம் என்று கருதினால், அது வெறும் கனவு தான், அந்தக் கனவு பலிக்காது, பலிக்காது என்பதை அண்ணாவின் மீது ஆணையாக, நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை மீது ஆணையாக என்று கூறியுள்ளார் கருணாநிதி.