Breaking News

மின்வெட்டு பற்றி தெரிந்துக்கொள்ள எஸ்எம்எஸ் ?

                                            
மின்தடை ஏற்படும் நேரம் குறித்து இனிமேல் எஸ்எம்எஸ் அனுப்ப தமிழக மின் விநியோகத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழகம் மின்சாரவாரியம் சார்பில் மின்கட்டணம் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. 

இதன் அடுத்த கட்டமாக அறிவிக்கப்பட்ட திடீர் என்று ஏற்படும் மின்தடை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட உள்ளது. 

இதுகுறித்து மின் விநியோகத்துறை அதிகாரிகள் கூறுகையில் மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் மேம்பாடு சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 110 நகரங்களில் மின் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. 

மேலும் அதன் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.