Breaking News

ரஷ்ய ஸ்மார்ட்போன் அறிமுகம்?

           

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை சீனத்து நிறுவன அறிமுகங்களைக் கண்டு வரும் நிலையில், ரஷ்யாவில் இருந்து யோட்டா ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் எனச் சொல்லப்படுகிறது.

ரஷ்ய நிறுவனமான யோட்டா (Yota) கடந்த ஆண்டு யோட்டா போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை டிஸ்பிளே வசதி கொண்டது. அதாவது எல்.சி.டி மற்றும் இ இங்க் டிஸ்பிளே கொண்டது. தேவைக்கேற்ப டிஸ்பிளேவைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது இந்தியாவில் மின்வணிக தளமான பிளிப்கார்ட் மூலம் விற்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்தச் செய்தியை மேக்டெக்பிளாக் வெளியிட்ட பிறகு பிலிப்கார்ட்டில் இதற்கான அறிவிப்பு நீக்கப்பட்டுவிட்டது.

இதேபோல எல்ஜி நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எல்ஜி ஸ்மார்ட்வாட்ச் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் அவை ஆண்ட்ராய்டு வியர் அடிப்படையிலானவை. இந்தப் புதிய வாட்ச் எல்ஜி கையகப்படுத்தி வைத்திருக்கும் வெப்.ஓஎஸ் அடிப்படையிலானது என்று சொல்லப்படுகிறது. 

இது தொடர்பாக எல்ஜி அமைத்திருந்த இணையதள அறிவிப்பும் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.