சாம்சங் காலக்ஸி Note4 அக்டோபர் 17ல் அறிமுகம்!
5.7 அங்குல அளவிலான திரையுடன், தன் சாம்சங் நோட்4 பேப்ளட் சாதனத்தினை வரும் அக்டோபர் 17ல் அமெரிக்காவில், சாம்சங் களம் இறக்குகிறது.
இதற்கான விற்பனை முன் பதிவினை ஆப்பிள் ஐபோன் 6 வெளியான அன்றே தொடங்கிவிட்டது.
பெரிய திரைகளுடன் கூடிய மொபைல் போன் மற்றும் நோட் சாதனங்களை சாம்சங் தான் முதலில் வடிவமைத்து வெளியிட்டது என இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி கிரிகோரி லீ தெரிவித்துள்ளார். பெரிய திரை சாதனங்களைப் பொறுத்த வரை, சாம்சங், வளர்ச்சி அடைந்த நான்காவது நிலையில் உள்ளது.
இந்த வகையில் மற்ற நிறுவனங்கள் இப்போது தான் நுழையத் தொடங்கி உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐபோன் 6 ப்ளஸ் திரை 5.5 அங்குலம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 16ல் சாம்சங் நோட் 4 வாங்குவோர் அனைவருக்கும், நன்றாகச் செயல்படும் எந்த ஸ்மார்ட் போன் கொண்டுவந்தாலும், நோட் 4ன் விலையில் 500 டாலர் தள்ளுபடியினைப் பெறுவார்கள்.
சாம்சங் காலக்ஸி நோட் 4ன் சிறப்பு அம்சங்கள்: 2.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர். 16 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா மற்றும் 3.7 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா. 32 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி, 128 ஜி.பி. வரை உயர்த்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 3 ஜி.பி. ராம் நினைவகம், 3,220 mAh திறன் கொண்ட பேட்டரி.
கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கும். அமெரிக்காவில் வெளியிடப்படும் இந்த காலக்ஸி நோட் 4 விரைவில் துபாய் (UAE) மற்றும் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகமாகும்.