Breaking News

குர்ஆன் அவமதிப்பு விவகாரம் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம், 10 ஏக்கர் நிலம்

    

லாகூர்: பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கசூர் மாவட்டத்தில் கொட்ரதா கிஷன் என்ற கிராமம் உள்ளது. இங்கு, கடந்த 4ம் தேதி, புனித குர்ஆனை அவமதித்ததாக எழுந்த புகாரின் பேரில் ஷாசத் மசி, ஷமா என்ற கிறிஸ்தவ தம்பதியினர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, 50 கிராமங்களை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, சர்வதேச அளவிலான மனித உரிமை அமைப்புகளும், பல்வேறு நாடுகளும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் பணமும், 10 ஏக்கர் நிலத்தையும் பாகிஸ்தான் அரசு இழப்பீடாக வழங்கி உள்ளது.