Breaking News

நீருக்கடியில் சுறா-விலாங்கு இடையே கடும் மோதல்; முடிந்தவரையில் சுறாவை விழுங்க முயற்சித்த விலாங்கு

                           
ஆஸ்திரேலியாவில் சுறா, பெரியவகை விலாங்கு மீன்கள் இடையில் நீருக்கடியில் நிகழ்ந்த கடும் போர் வீடியோவாக வெளியாகியுள்ளது. நீருக்கடியில் பசியுடன் இருக்கும் பெரியவகை விலாங்கு ஒன்று நீந்திவரும் சுறாவை பார்க்கிறது. அதனை சாப்பிட முயற்சி செய்து அதனுடன் கடும் போர் நடத்துகிறது. இரண்டும் ஒன்றை, ஒன்று விடாத வண்ணம் போராடிவருகிறது.

கடும் மோதலின் போது, விலாங்கு, சுறாவை பாறைக்குள் நெருக்கி கொண்டு சென்று சாப்பிட முயற்சி செய்கிறது. ஆனால் சுறா எதிர் தாக்குதல் நடத்துகிறது. பாறையின் இடையில் இருந்து சுறா வெளியேறும் நிலையில் அதனது வால் பகுதியை விலாங்கு வாயினால் கவ்வி கொள்கிறது. இதனையடுத்து கடும் போட்டியிடும் சுறா, விலாங்குவின் மேற்பகுதியை முடிந்தவரையில் முயற்சி செய்து கடிக்கிறது. ஆனால் விட்டுக் கொடுக்காமல் சுறாவினை விழுங்கும் முயற்சியில் இருந்து விலாங்கு பின்னேறவில்லை.

தொடர்ந்து சண்டையிட்ட விலாங்கு ஒருகட்டத்தில் சுறாவின் தலைப்பகுதியை பிடித்து வாய்க்குள் கொண்டு செல்கிறது. விலாங்கு கடினாமாக போராடி பிடித்துவிட்ட சுறாவை விழுக்க முயற்சி செய்கிறது. ஆனால் அதற்கு சுறா இடம் கொடுக்கவில்லை. சுறா பயங்கராமாக தனது உடல்வாக்கினை விலாங்குவின் வாயுங்கள் அடங்கிவிடாத வண்ணம் அசைக்கிறது. இரண்டுக்கும் இடையே பெரும் யுத்தமே அரங்கியது. ஆனால் சுறாவின் முயற்சியே கடைசியில் வெற்றி பெற்றது. விலாங்குவால் சுறாவை விழுங்க முடியவில்லை. 

விலாங்குவின் வாயில் இருந்து சுறா வெளியேறிவிட்டது. பயங்கரமாக போர் செய்த விலாங்கு சிறிய சுறா மீனை சாப்பிட முடியாமல் தோல்வியடைந்தது. சண்டை முடிந்ததும், உயிர்பிழைத்தோம் என்ற ஒருதுளி அச்சம் கூட இல்லாமல் மிகவும் சாதாரணமாக நீந்தி சென்றது வீடியோவில் பதிவாகியுள்ளது.     


வீடியோ..