தனியார் துறைகளில் பணிபுரிய வேலை வாய்ப்பு முகாம்
சென்னை: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும் 8ம் தேதி தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்துவதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 8ம் தேதி நடைபெறுகிறது. இம்முகாம் மூலம் பல தனியார்துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள சேல்ஸ்மேன், சேல்ஸ் எக்சிகியூட்டிவ், மார்க்கெட்டிங் உதவியாளர், ஆப்ரேட்டர்ஸ் உள்பட பல இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.
18 வயது முதல் 35 வயது வரம்புள்ள 10ம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். விரும்புபவர்கள் தங்களின் சுயவிவரங்களுடன், சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், ஸ்ரீனிவாசா அவென்யூ, செட்டிநாடு ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமில் நேரில் கலந்து கொள்ளலாம்.