பிரான்சில் விமான விபத்து
ஸ்பெய்னின் பார்சலோனாவிலிருந்து, ஜேர்மனியின் டசல்டோர்ப் நோக்கிப் பயணித்த
விமானமொன்று பிரான்சில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு பிரான்சின் அல்ப்ஸ் பகுதியிலேயே விமானம் கீழே விழுந்துள்ளதாக வெளிநாட்டு
ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எயார்பஸ் ஏ320 விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் போது 142 பயணிகளும், 2 விமானிகள் மற்றும் 4 விமானப் பணிப்பெண்கள்
விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மனியின் 'ஜேர்மன் விங்ஸ்' விமானச் சேவைக்கு சொந்தமான விமானமொன்றே
விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் விமானத்தின் சிதைவுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், பயணித்த
எவரும் உயிர்பிழைக்கவில்லையெனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்
தெரிவிக்கின்றன.


கருத்துகள் இல்லை