Breaking News

தோற்றுப் போன தென் ஆப்பிரிக்கா.. குஷ்பு இதயம் "உடைந்தது"!

சென்னை: தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில்
தோல்வியுற்றது குறித்து வேதனை தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு.

நடிகை குஷ்புவும் கோடானு கோடி கிரிக்கெட் ரசிகர்களைப் போல இன்று நடந்த
நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான அரை இறுதிப் போட்டியைப் பார்த்து
ரசித்தார்.

எல்லோரையும் போலவே அவருக்குள்ளும் யார் வெல்வார் என்ற பதட்டம் இருந்ததை அவரது
டிவிட்டர் பக்கம் காட்டுகிறது.

போட்டி முடிவில் அவர் போட்டுள்ள டிவிட்டில் இப்படிக் கூறியுள்ளார் குஷ்பு...
யாய்ய்ய்ய்ய்ய்ய... நியூசிலாந்து கங்கிராஜுலேஷன்ஸ்.. என்ன ஒரு வெற்றி.. ஆனால் எனது
இதயம் முழுவதும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்குத்தான். அவர்களுக்காக
அனுதாப்படுகிறேன்.. எனது இதயமே உடைந்தது போல உள்ளது என்று கூறியுள்ளார்
குஷ்பு.

காணாமப் போயிரனும்ப்பா
இன்னொரு டிவிட்டில் 26ம் தேதி நான் யார் கண்ணிலும் படாமல் மாயமாகப் போகிறேன்.
அன்று முழுவதும் யார் கண்ணிலும் பட மாட்டேன். அதேபோல 29ம் தேதியும் காணாமல்
போய் விடுவேன் என்று கூறியுள்ளார் குஷ்பு.

26ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 29ம் தேதி
இறுதிப் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை