அதிரை ஈசிஆர் சாலையில் நாகை முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன் வாகனம் கவிழ்ந்து விபத்து !
நாகப்பட்டினம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன். இவர் நேற்று
குளச்சலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு ஈசிஆர்
சாலையில் நேற்று நள்ளிரவு நாகப்பட்டினம் திரும்பினார். வாகனத்தில் தனது
நண்பர் மற்றும் ஓட்டுனர் ஆகிய இருவரும் பயணித்தனர்.
வாகனம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அதிரை ஈசிஆர் சாலை கருங்குளம்
பாலம் அருகே சென்ற போது சாலையோர எல்லை கல்லில் மோதி அருகில் உள்ள
பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வாகனத்தில் பயணித்த மூவரும்
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனத்தின்
முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
தகவலறிந்த அதிரை காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அஹ்மது
கபீர், பி.எஃப்.ஐ டிவிசன் பிரசிடென்ட் வழக்கறிஞர் நிஜாமுதீன், எஸ்டிபிஐ
கட்சியினர் மற்றும் அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று
வாகனத்தில் சிக்கிய மூவரையும் மீட்டு அவர்களுக்கு வேண்டிய உதவியை
உடனிருந்து செய்து கொடுத்தனர்.
இதையடுத்து ஜேசிபி வாகனம் உதவியுடன்
பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த வாகனத்தை மீட்டு சொந்த ஊருக்கு பத்திரமாக
அனுப்பி வைத்தனர். அதிகாலையில் நிகழ்ந்த விபத்து அப்பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.


கருத்துகள் இல்லை