Breaking News

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா மறைவு

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் இன்று
உடல்நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 90.
இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ்
பெற்றவர் நாகூர் ஹனிபா. 11-ஆம் வயதில் பள்ளிக்கூடத்தில் பாட
ஆரம்பித்த நாகூர் ஹனிபா திருமண வீடுகள், மேடைக்கச்சேரி என்று
தொடர்ந்து பாடினார்.

கடந்த 65 ஆண்டுகளில் 5000-க்கும் மேற்பட்ட திருமண வீடுகளில்
பாடியுள்ளார். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும்,
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.
இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக்
குறைவு காரணமாக நாகூர் ஹனிபா உயிர் பிரிந்தது.

கருத்துகள் இல்லை