இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள கண்ணியங்களில் மிக முக்கியமானது பர்தா என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள கண்ணியங்களில் மிக முக்கியமானது பர்தா என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பெருகி விட்ட நிலையில் பர்தா என்பது பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியாத இருக்கிறது.
இந்நிலையில் பி.ஜே .பி.யின் தேசிய செயலாளர் எச்.ராஜா நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அளித்த பேட்டியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வருவது தேர்வுகளின் பிட் அடிப்பதற்காக என்று கொச்சைபடுத்தும் விதமாகவும் ,மாணவிகள் மத்தியில் பிரிவினையை உருவாக்கும் கருத்துக்களை கூறியுள்ளார்.
முஸ்லிம் பெண்களின் பர்தா பற்றி தவறாக பேசிய பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தேசிய பெண்கள் அமைப்பான நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக நாகை மற்றும் காரைக்கால் ஒருங்கிணைப்பாளர் சகோதரி. பானு அவர்களால் நாகை மாவட்டம் காவல் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை