Breaking News

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் அமைப்புக்கு சாகித் அப்ரிடி ரூ.20 லட்சம் நன்கொடை !

கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி களத்தில் ஆக்ரோஷம் காட்டினாலும், கிரிக்கெட் மூலம் தான் சம்பாதிக்கும் பணத்தை பெரும்பாலும் நாட்டு நலனுக்காகவே செலவிட்டு வருபவர்.

கிராமங்களுக்கு சாலை போடுவது, புற்றுநோய் மருத்துவமனை கட்டுவது போன்ற அறப்பணிகளில் சாகித் அப்ரிடி ஈடுபட்டு வருகிறார். கராச்சி நகரில் செயல்பட்டு வரும் உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான 'தாருல் சுகான்' என்ற அமைப்புக்கு நேற்று சாகித் அப்ரிடி சென்றார்.

அங்கு மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்ட அப்ரிடி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடன் பேசியும் மகிழ்ந்தார். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நலனுக்காக 20 லட்சம் பாகிஸ்தான் பணத்தையும் நிதியுதவியாக சாகித் அப்ரிடி அளித்தார்.

கருத்துகள் இல்லை