Breaking News

இந்தியா இல்லாமல் உலக வளர்ச்சி சாத்தியமில்லை: பில் கேட்ஸ்

உலகின் பெரும்பணக்காரரான பில் கேட்ஸ் உலக நாடுகளின் வளர்ச்சி இலக்குகள் இந்தியா இல்லாமல் சாத்தியமாகாது என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் 17 திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்தது. அதில் மிக முக்கியமானது வறுமை ஒழிப்பு. இந்தத் திட்டங்கள் அனைத்தையும் அடுத்த 15 வருடத்திற்குள் நடைமுறைப்படுத்தி வெற்றிபெற திட்டமிடப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பிற்கு தன்னுடைய ஆதரவை கணிசமாகக் கொடுத்துவரும் பில் கேட்ஸ், எந்தவொரு வளர்ச்சி திட்டமாக இருந்தாலும் அந்தத் திட்டங்களை இந்தியா இல்லாமல் வெற்றிபெற செய்ய முடியாது. 

உலக நாடுகளின் வளர்ச்சி இந்தியா இல்லாமல் சாத்தியமில்லை என்றார்.

கருத்துகள் இல்லை