இந்தியா இல்லாமல் பேஸ்புக் இல்லை : மார்க் ஜூக்கர்பெர்க்
புதுடில்லி : பேஸ்புக்கின் வளர்ச்சிக்கு இந்தியா இன்றியமையாத பங்கு வகிக்கிறது என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், டில்லியில் ஐஐடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்களின் கேள்விகளுக்கு மார்க் ஜூக்கர்பெர்க் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
இந்தியாவில் உள்ள இளைஞர்கள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். பேஸ்புக்கின் இன்றைய வளர்ச்சிக்கு, இந்தியாவின் பங்கு அளப்பரியது. பேஸ்புக்கின் மூலம் பல்வேறு துறை நிபுணர்களின் கருத்து பரிமாற்றங்கள் நடைபெறுவது ஆரோக்கியமான விஷயமாக கருதுகிறேன்.
இதன்மூலம், பொருளாதார மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், பேஸ்புக் மேலும் வலுப்பெறும் என்ற நம்புவதாக மார்க் ஜூக்கர்பெர்க் கூறினார்.


கருத்துகள் இல்லை