மார்க் துறைமுகத்தை கண்டித்து நாகூரில் இன்று ரயில் மறியல்..
நாகை: நாகூரில் மார்க் துறைமுகத்தை கண்டித்து சமூக அமைப்பு சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடக்கவுள்ளது. இந்த போராட்டத்திற்கு இந்திய தேசிய லீக் ஆதரவு தெரிவித்துள்ளது. நாகூர் வாஞ்சூரில் உள்ள மார்க் தனியார் துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்பின்றி நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் நிலக்கரி துகள்கள் காற்றில் கலந்து மாசு ஏற்பட்டு, துறைமுகத்தை சுற்றி உள்ள நாகூர், வாஞ்சூர், மேலவாஞ்சூர், முட்டம், பனங்குடி, பூதங்குடி, மேலநாகூர், பெருங்கடம்பனூர், திருப்பட்டினம், போலகம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
காற்றில் கலந்துள்ள நிலக்கரி துகள்களால் பொதுமக்கள் சுவாச கோளாறு, நுரையீரல், சைனஸ் பிரச்னை, தீராத தலைவலி, குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஒவ்வாமை ஆகிய உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் மேற்கண்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், கோயில்கள், பள்ளி வாசல்கள் ஆகியவற்றில் கரிப்படிந்து கட்டிடங்கள் பொழிவிழந்து காணப்படுகின்றன. இதை தமிழகம், புதுவை மற்றும் மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் உள்ளன.

சென்னை துறைமுகத்தில் இதே பிரச்னை ஏற்பட்டபோது, ஐகோர்ட் தலையிட்டு, நிலக்கரி இறக்குமதியை நிறுத்தி, மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 6 கி.மீ. தூரத்திற்கு அப்பால் கொண்டு சென்றதை யாரும் மறந்திருக்க முடியாது. இப்படி எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை தடுக்க வலியுறுத்தி நாகூர் ரயில் நிலையம் முன், சமூக நல அமைப்பு சார்பில், இன்று (21ம்தேதி) நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்திற்கு இந்திய தேசிய லீக் ஆதரவளித்து, போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவெடுத்துள்ளது.
மேலும் இப்போராட்டத்தில் பொதுமக்களும், மாணவர்களும் திரளாக கலந்து கொள்ளவும் இந்திய தேசிய லீக் கேட்டு கொள்கிறது என அதன் தேசிய பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான நிஜாமுதீன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.