மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியால் சுற்றுச்சூழல் அபாயம்
நாகை: மார்க் துறைமுகத்திர் நிலக்கரி இறக்குமதியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே நிபுணர்குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கீழவாஞ்சூர் காரைக்காலில் உள்ள மார்க் துறைமுகத்தில், எந்தவித பாதுகாப்பும் இன்றி வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. கப்பல்களில் இறக்கப்படும் நிலக்கரி வெட்டவெளியில் கொட்டப்படுகிறது. அவ்வாறு கொட்டப்படும் நிலக்கரி குவியல்களில் இருந்து தூசிகள் காற்றில் பறந்து, நாகை மாவட்டம் நாகூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் படிந்து வருகிறது.
இதனால் அந்த பகுதிகளில் வசித்து வரும் குழந்தைகள், வயதானவர்கள் சுவாச பிரச்னைகளுக்கும், நுரையீரல் தொற்று நோய்களுக்கும் ஆளாகி அல்லல்பட்டு வருகிறார்கள். நிலக்கரி துகள்களை நாம் தொடர்ந்து சுவாசித்து வருவதால், ( Tuberculosis. Siliccsis ) என்ற புற்றுநோய், கருச்சிதைவு போன்ற பாதிப்புகள் உருவாக அதிக பாதிப்புள்ளது.
எனவே நாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நிலக்கரி துகள்களால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படும் முன்பாக, மாவட்ட கலெக்டர், காரைக்கால் மார்க் துறைமுகம் நிலக்கரி இறக்குமதி செய்யவதன் மூலமாக ஏற்பட்டுள்ள சுற்றுப்புற சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய டாக்டர்கள், சுற்றுச்சூழலியலாளர்கள் அடங்கிய குழு ஒன்றை ஏற்படுத்தி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகூர் - திட்டச்சேரி, நாகூர்-கங்களாஞ்சேரி ஆகிய மார்க்கங்கள் வழியாக நிலக்கரி லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இதனால் சாலைகளின் இருபுறமும் நிலக்கரி துகள்கள் பெருமளவில் கொட்டி கிடப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நிலக்கரி துகள்களால் சறுக்கி இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அன்றாக
நிகழ்வாக உள்ளது. எனவே சாலைகளில் கொட்டியுள்ள நிலக்கரி துகள்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்திற்கு தக்க அறிவுரை வழங்குவதுடன், நிலக்கரி துகள்களில் சாலைகளில் கொட்டாதவாறு லாரிகளில் கொண்டு செல்ல மார்க் துறைமுக நிர்வாகத்திற்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும் என நாகூர் சமூக ஆர்வலர்கள் அமைப்பு மாவட்ட கலெக்டர் பழனிச்சாமியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.