PLASTIC முட்டை நாகூர் மக்கள் உசார்..
நாகப்பட்டினம் காடம்பாடியில் உள்ள கடையில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக கழக ஊழியர் ஒருவர் இன்று ( 29.01.17 ) அதிகாலை அளித்த புகாரினையடுத்து உடன் அந்த கடைக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் புகார் அளித்த நபரையும் வரவழைத்து முட்டையை அவரிடமே கொடுத்து பிளாஸ்டிக் முட்டை கண்டறியும் விதம் குறித்து விளக்கிக் கூறி அவரை பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பரிசோதிக்க சொல்லப்பட்டது. பரிசோதனைகளுக்குப் பின்னர் அவர் அளித்த புகார் உண்மை அல்ல அது பிளாஸ்டிக் முட்டையல்ல என புகாரளித்தவர் மன திருப்தியுடன் பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர் முன்னிலையில் கூறினார்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் " பிளாஸ்டிக் முட்டையாக இருக்கும்பட்சத்தில் முட்டையை உடைக்காமல் முழுதாக உள்ளதை துணியின் நன்கு உரசியவுடன் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட காகிதங்களுக்கருகில் கொண்டுசென்றால் பிளாஸ்டிக்கில் உராய்வின் மூலம் தூண்டப்பட்ட மின் காந்த சக்தியால் காகிதம் முட்டை ஓட்டில் ஒட்டிக் கொள்ளும், முட்டையை சரி பாதியாக உடைத்த பின்னர் அடிப்பாகம் அகன்ற உட்புறத்தில் காற்றால் உப்பிய பகுதி பிளாஸ்டிக் முடையில் காணப்படாது,
முடையின் உட்புறம் உள்ள மெல்லி ஜவ்வு போன்ற பகுதியை கவனமாக தனியே பிரித்து வைத்தால் அந்த முட்டை பிளாஸ்டிக்காக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த ஜவ்வு போன்ற பகுதி கடினத் தன்மை அடைந்துவிடும், மேலும் முட்டையை உடைத்து உள் உள்ள மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவை ஊற்றினால் அவை நல்ல முட்டையாக இருப்பின் கருக்கள் தனித் தனியே தெளிவாக இருக்கும் இதுபோன்ற அம்சங்களை வைத்து சாதாரண முட்டைக்கும் பிளாஸ்டிக் முட்டைக்குமுள்ள வேறுபாட்டை உணரலாம்.
மேற்கொண்டு விற்பனை செய்யப்படும் முட்டை குறித்து சந்தேகமிருப்பின் நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூர், வடக்கு மற்றும் தெற்கு பால்பண்ணைச்சேரி, காடம்பாடி, வெளிப்பாளையம் மற்றும் நாகப்பட்டினம் பகுதி மக்கள் 9442214055 என்ற செல்லிடப் பேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் ஆய்விற்குப் பின்னர் தேவைப்பட்டால் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் 2006-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.
ஆய்வின்பொழுது நாகப்பட்டினம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆர்.மஹாராஜனும் ஆய்வினை மேற்கொண்டார்
-ஏ.ட்டீ.அன்பழகன்,
உணவு பாதுகாப்பு அலுவலர்,
நாகப்பட்டினம் நகராட்சி
செல்: 9442214055
-ஏ.ட்டீ.அன்பழகன்,
உணவு பாதுகாப்பு அலுவலர்,
நாகப்பட்டினம் நகராட்சி
செல்: 9442214055
பிளாஸ்டிக் முட்டையை கண்டுபிடிப்பது எப்படி?
வீடியோ இணைப்பு..