நாகை நகராட்சியின் அவலம் பாரீர்..

நாகூரில் தேவையான. அளவுக்கு குப்பை தொட்டிகள் இல்லை,பழுதடைந்த உடைந்து போன குப்பை தொட்டிகளே சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளன,நாகூர் நகரெங்கும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இதை போக்கும் விதமாக நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் மிகவும் அலட்சிய போக்குடன் செயல்படுகிறது.



சுற்றுலாதலமான நாகூரில் யாத்ரீகர்களுக்கு அடிப்படை வசதியான கழிவறை,குளிக்கும் வசதிகளுடன் கூடிய இலவச குளியலறை கழிப்பிட வசதிகள் செய்து தரப்படவில்லை, நகரெங்கும் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.இது குறித்து நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலைகள் அனைத்தும் மிகவும் மோசமடைந்துள்ளன.சில தெருக்களில் சாலைகளே இதுவரை போடப்படவில்லை.


இருளடைந்து கிடக்கும் நாகூர் நகர தெரூக்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும், நகராட்சி பள்ளி கூடங்கள் முறையாக அடிப்படை வசதிகளுடன் பராமரிக்கப்பட வேண்டும், நாகூர் நகருக்குள் சுற்றுலாவுக்கு வரும் வாகனங்கள் முறையாக நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும்.