அரசு ஆணைப்படி தெருப்பெயர் மாற்றம் குறித்து சில தகவல்கள் :-
சியா மரைக்கார் தெரு எங்களது முன்னோர் 'சியா அஹ்மத் மரைக்கார்' அவர்களால் - "சியா மரைக்கார் தெரு" என்று அழைக்க படுகின்றது..

உதாரணத்துக்கு மரைக்காயர்கள் என்று இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் உண்டு. இவர்கள் 18-ஆம் நூற்றாண்டில் தான் கடல்சார்ந்த வாணிகத்தில் இருந்தததாக சொல்வார்கள். மரைக்கல ராயர் என்ற சொல்லில் இருந்துதான் மரைக்காயர்கள் சொல் வந்துள்ளதாக 18-ஆம் நூற்றாண்டை ஆய்வு செய்யும் வரலாற்றாசிரியர்கள் சொல்வதுண்டு.
முதலாம் குலோத்துங்கன் காலத்திய பண்டைய பாரூஸ், இன்றைய இந்தோனேஷியாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் மரைக்கல ராயர் என்ற சொல் வருகிறது. இது தமிழில் கிடைத்த கல்வெட்டு. எனவே, 700, 600 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தொழிலில் மரைக்காயர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம்.
ராமநாதபுரம் கடற்கரையொட்டி மரைக்காயர் பட்டினம் என்ற ஊரின் பெயரும் இதனால்தான் வந்துள்ளது. மரைக்காயர் என்ற பெயர் மரக்கலத்தார் என்ற சொல்லிருந்து மருவி வந்ததாகவும் சொல்கிறார்கள். அவரவர் செய்யும் தொழிலைக் கொண்டே மரைக்காயர், மாலிமார், இராவுத்தர் என்று அழைக்கப்பட்டார்கள். ஆகவே அவரவர்களால் ஏற்படுத்தியது அல்ல இது ஜாதிப்பெயர் இல்லை.
ஒரு சமூகத்தை இம்மாதிரியான பெயர்கள்ச்சொல்லி அழைத்தார்கள் ஒரு அடையாளத்துக்காக... நம் அடையாளம் பாதுக்காக்கப்பட வேண்டும்...
வருந்தாதே !!!
எதை இழந்தாலும் அது இன்னொரு வடிவில் வந்துசேரும்... (சியா)
தகவல் :-
செய்யது அலி (சிங்கப்பூர்)