வாயில் 22 எரியும் மெழுகுவர்த்தியை வைத்து மும்பை நபர் கின்னஸ் சாதனை
மும்பை: 22 எரியும் மெழுகுவர்த்தியை வாயில் வைத்து மும்பையை சேர்ந்த நபர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தினேஷ் உபாத்யாயா என்பவர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பல உலக சாதனை படைத்துள்ளார். 57 லிம்கா சாதனை, 3 ரிப்ளே உலக சாதனை உட்பட 89 கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அவருடைய சாதனைகள் சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பை பெறுகின்றன.
இந்நிலையில் தினேஷ் தனது வாயில் எரியும் 22 மெழுகுவர்த்திகளை 30 வினாடிகள் வைத்து இருந்தார்.
இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. வாயில் எரியும் 22 மெழுகுவர்த்திகளை அவர் வைத்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தினேஷ் இது போன்று பல சாதனைகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெழுகுவர்த்தி வீடியோ முகநூலில் 3.7 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.