Breaking News

நாகை மாவட்டத்தில் சினிமா தியேட்டர்களில் சுகாதார பணிகள் ஆய்வு செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


சீர்காழி,அக்.24: சினிமா தியேட்டர்களில் சுகாதார பணிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சினிமா தியேட்டர்களில் கழிப்பறைகள் முறையாக  பராமரிக்கப்பட்டவில்லை. குடிநீர் டேங்க் சுத்தம் செய்வதில்லை. செடிகொடிகள் மண்டிக்கிடக்கின்றன என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  

தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூல் செய்யும் உரிமையாளர்கள் பொதுமக்களின் நலன் கருதி சினிமா தியேட்டரை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து  கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது டெங்கு காய்ச்சல், மலேரியா, சிக்குன்குனியா, டைப்பாய்டு போன்ற நோய்கள் பரவி வரும்  நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களிலும் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து உரிய  நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.