டெங்கு கொசு உற்பத்தி : திருவாரூரில் 2.64 லட்சம் அபராதம்
திருவாரூர் : திருவாரூரில் டெங்கு கொசுக்கள் உருவாகும் வகையில் செயல்பட்டோருக்கு 2.64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் கொசு உற்பத்திக்கு காரணமான பேக்கரிக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் 150 பேருக்கு காய்ச்சல், 9 பேருக்கு டெங்கு அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிமலராஜ் தெரிவித்துள்ளார். மேலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் செயல்பட்டதாக 1,400 பேருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.