3 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் தாமரைக்குளம்
மேலும் பேரழிவின் காரணமாக பொதுமக்கள் புதிய கடற்கரைக்கு செல்லவே அஞ்சினர். எனவே தாமரைக்குளத்தை தூர்வாரி சுற்று சுவர்களை பலப்படுத்தி சுற்றிலும் நடைபயிற்சிக்கு ஏற்ப பாதையும், அதன் முன் சிறுவர் பூங்காவும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியின்போது சுமார் ரூ.3 கோடி மதிப்பில் தாமரைக்குளம் அழகுப்படுத்தப்பட்டது.

நடைப்பயிற்சி தளம், சிறுவர் பூங்கா, மரம் செடிகள் நடப்பட்டு ரம்மியமான தோற்றத்துடன் தாமரைக்குளம் மாறியது. மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல வகை மீன்கள் தாமரைக்குளத்தில் விடப்பட்டன. ஆனால் இன்றைக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லாமல், தாமரைக்குளம் வறண்டு சிறுவர்களின் கிரிக்கெட் மைதானமாக மாறி விட்டது. முட்புதர்கள் மண்டி அழகு குன்றி போய் உள்ளது. எனவே தாமரைக்குளத்தை உடனடியாக சீரமைத்து உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை தாமரைக்குளம் சீரமைக்கப்படவில்லை. எனவே தாமரைக்குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.