வைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் உடற்பயிற்சி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது தனித்துவமான ஆட்டத்தால் கிரிக்கெட்டில் தனி இடத்தை பிடித்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. இவர் ஜிம்மில் கடினமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட ரெய்னாவின் ரசிகர்கள் பலர் இதை இணையத்தளங்களில் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் முக்கியமான விஷயம், ஆனால் அது அவ்வளது எளிதான அல்ல. ஆனாலும் அனைவரும் உடற்பயிற்சியினை தவறாமல் முயற்சிக்க வேண்டும் என்றும் ரெய்னா கூறியுள்ளார்.