இந்தியா சுற்றுலா கையேட்டில் தாஜ் மஹால் இல்லை : உ.பி. அமைச்சர் போட்டு உடைத்த உண்மை
லக்னோ : மாநில அரசின் சுற்றுலா கையேட்டில் உலக அதிசயங்களின் ஒன்றான தாஜ் மஹாலுக்கு இடம் இல்லை என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார் உத்தர பிரதேச கலாச்சத்துறை மற்றும் சமய அறநிலையத்துறை அமைச்சர் லஷ்மி நாராயணன் சவுதரி. பாரதிய ஜனதா இளைஞர் அணி நடத்திய கூட்டம் ஒன்றில் பேசிய உத்தர பிரதேச கலாச்சாரத்துறை மற்றும் சமய அறநிலையத்துறை அமைச்சர் லஷ்மி நாராயணன் சவுதரி இதனை கூறியுள்ளார்.
இதை அடுத்து தாஜ்மஹாலை புறக்கணிக்க வில்லை என்ற உத்திர பிரதேச அரசின் விளக்கம் பொய் என்பது அம்பலமாகியுள்ளது. தாஜ்மஹாலை நீக்கியது சரியே என்று கூறியுள்ள அவர், அதற்கு பதிலாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் மடத்தை சேர்க்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார். தர்மநீதி மற்றும் நாட்டுப்பற்றின அடிப்படையில் தாஜ்மஹாலை நீக்கும் முடிவை ஆதித்யநாத் அரசு எடுத்துள்ளது என்பது அமைச்சரின் விளக்கம்.
உத்தர பிரதேச பாரதிய ஜனதா அரசு வெளியிட்டுள்ள புதிய அதிகாரப்பூர்வ சுற்றுலா கையேட்டில், தாஜ் மஹால் இடம் பெறவில்லை. அதற்கு தேசிய அளவில் எதிர் காட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் ஏற்கனவே தாஜ் மஹாலை நீக்கவில்லை என மாநில சுற்றுலா அமைச்சகம் பதிலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.