குப்பை மேடாகும் நாகூர் இதற்கு என்ன தீர்வு ?
வாஞ்சூரை தாண்டி நாகூர் வெட்டாறு பாலம் வரும்போது நாகை நகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பலகையை பார்க்க முடிகிறது அப்டியே லைட்டா ரைட்ல திரும்பினால் குப்பை கிடங்குகள் நறுமனத்துடன் வரவேற்கிறது.
இது நாகூர் வெட்டாறு பாலம் அருகில் உள்ள நாகூர் -வெட்டாறு சாலை (கங்கனாச்சேரி வழியாக திருவாரூர் செல்லும் சாலை) ECR வந்த பிறகு இந்த சாலை ECR ருடன் சேர்ந்துவிட்டத்தால் , இந்த சாலையை பயன்படுத்த வாஞ்சூர் ரவுண்டான ECR வழியாக தான் செல்ல முடியும். எனவே இந்த
நாகூர் - வெட்டாறு சாலை தொடர்ச்சி இல்லாமல் துண்டிக்கப்பட்டு தற்போது நாகூர் மற்றும் சுற்றுப்புறங்களில் நகராட்சி ஊழியர்கள் மூலம் எடுக்கும் குப்பைகளை கொட்டும் குப்பை கிடங்காக முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டது.
நாகூர் மக்களுக்கு குப்பை போடுவதற்கு சரியான இடமில்லை என்கிறார்கள்.
நகராட்சி ஊழியர்கள் எடுத்த குப்பையை கொட்டுவதற்கு இடமில்லை என்கிறார்கள்.
வரும் காலங்களில் நாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குப்பையால் ஏற்படபோகும் சுகாதார கேடுகள், நிலக்கரி பாதிப்பை எல்லாம் மிஞ்சிவிடும் என்றே என்ன தோன்றுகிறது.
கடந்த சில தினங்களாக தொடர் மழையின் காரணமாக நாகூர் தெருக்களில் உள்ள குப்பை தொட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிந்து , பாலிதீன் பைகள் மழை நீரோடு சாக்கடைகளில் கலந்து கலர் கலராக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதற்கு அரசை மட்டுமே குறைகூறி கொண்டு இருப்பது அறியுடைமை அல்ல. இதை சரி செய்ய நாம் ஓவ்வொருவரும் முனைப்பு காட்ட வேண்டும். நம் நம் தெருவிலிருந்து செய்ய முன்வர வேண்டும். இதற்காக முயற்சி செய்பவர்களுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் மக்கள் கொடுக்க வேண்டும்.
எனவே சரியான திட்டமிடலும், தன்னார்வலர்களும் இணைந்தால் நம் ஊர் சுற்றுசூழலை ஆரோக்கியமானதாக இறைவன் அருளால் மாற்றி அமைக்கலாம்.
வீடியோ இணைப்பு :
வீடியோ இணைப்பு :