நாகையில் ஜனவரி 7ம் தேதி போலீஸ்-பொதுமக்களுக்கான மாரத்தான் ஓட்டம்
நாகை மாவட்டத்தில் காவல் துறை மற்றும் பொதுமக்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காக வருகிற ஜனவரி மாதம் 7ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது.
ஆண்களுக்கான ஓட்டப்பந்தயம் வருகிற ஜனவரி 7ம் தேதி காலை 7.30 மணியளவில் 10 கி.மீ. தூரமும், பெண்களுக்கான ஓட்டப்பந்தயம் காலை 7 மணியளவில் 5 கி.மீ. தூரமும் நடைபெற உள்ளது.
போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட எஸ்பி அலுவலக வரவேற்பறையில் ரூ.10 நுழைவுக்கட்டணம் செலுத்தி தங்கள் பெயரை வருகிற 18ம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளும்படி மாவட்ட எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.