Breaking News

மகளுடன் இணைந்து குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்..!

ar-rahman-children-s-day-wishes


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குழந்தையுடன் இணைந்து குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி அதாவது இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குழந்தையுடன் சேர்ந்து குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்ட்டாகிராம்  பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான் முதலில் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவிக்கிறார். அதனைத்தொடர்ந்து அவரது மகள் ரஹிமாவும் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கதீஜா, ரஹிமா, அமீன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். பொதுவாகவே வெளிநிகழ்ச்சிகளில் தன் குழந்தைகளுடன் ஏ.ஆர் ரஹ்மான் அவ்வளவாகக் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில் தனது மகளுடன் இணைந்து குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.