Breaking News

இந்தியாஉலகில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்: பேங்க் ஆப் அமெரிக்கா தகவல்



மும்பை: 2028-ம் ஆண்டில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேங்க் ஆப் அமெரிக்காவின் மூலதனப் பிரிவான மெர்ரில் லிஞ்ச், இந்தியா 2028 என்ற தலைப்பில் இந்திய பொருளாதாரத்தை மதிப்பீடு செய்து இந்த ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளது. 

உள்நாட்டு உற்பத்தியில் 7% வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், இதே வேகத்தில் வளர்ச்சி நீடித்தால் 2028-ம் ஆண்டில் இந்தியா உள்நாட்டு உற்பத்தியில் 83% வளர்ச்சியை எட்டும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் 5-வது இடத்தில் உள்ள இந்தியா, ஜெர்மனி மற்றும் ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு, மூன்றாவது மிகப்ெபரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

                                   

இது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 10 % அதிகம் ஆகும். இதன் மூலம் 2017-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முதலீட்டு விகிதம் 32.4  சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயரும் என மெர்ரில் லிஞ்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.