Breaking News

துபாயில் கண்கவர் சாகச நிகழ்ச்சிகளுடன் விமானக் கண்காட்சி

boeing-wins-big-787-deal-at-dubai-air-show-delivering-surprising-early-blow-to-airbus


துபாயில் விமான கண்காட்சியை ஒட்டி நடந்த விமான சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

துபாயில் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் விமானக் கண்காட்சியில் ரஷ்யாவின் போர் வி‌மானங்களான சுகோய், ஜப்பானின் கவாசகி,‌‌ உக்ரைனின் அன்டோநவ், சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டுத் தயாரிப்பில் உருவான ஜேஎஃப் 17 உள்ளிட்ட 160-க்கும் மேற்பட்ட விமானங்கள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர ஜம்போ ஏர்பஸ், போயிங் 787, போயிங் 777 போன்ற பயணிகள் விமானங்களும் கண்காட்சியில் பார்வையாள‌ர்களை வெகுவாகக் கவர்ந்தன. இந்தக் கண்காட்சியை முன்னிட்டு பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் சீனா, ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டு விமானக் குழுவினரின் அசத்தலான விமான சாகச ‌நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.