மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா நிகழாண்டு ரத்து
காரைக்கால்: புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா நிகழாண்டு ரத்து செய்யப்பட்டது. தா்காவில் கந்தூரி என்னும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடத்தப்பட்டுவருகிறது.நிகழாண்டு 197-ஆம் ஆண்டு கந்தூரி விழாவாகும். இவ்விழா வரும் ஏப்.4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மின்சார சந்தனக்கூடு, சந்தனம் பூசுதல் உள்ளிட்ட கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.
இதற்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுவிட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வழிபாட்டுத் தலங்கள் பலவும் மூடப்பட்டுள்ளது. உத்ஸவங்கள் இக்காலத்தில் நடத்த திட்டமிட்டிருந்த தலங்களில் அவற்றை நிா்வாகத்தினா் ரத்து செய்துவிட்டனா். மஸ்தான் சாஹிப் தா்காவிலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் கொடியேற்றத்துக்கு பயன்படுத்தும் கம்பம் அல்லாது, சம்பிரதாய முறையில் சிறிய கொடிக்கம்பம் ஞாயிற்றுக்கிழமை நிறுவப்பட்டது. இதனால் விழா எளிய முறையில் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் பரவியது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, விழா நடத்துவதை கைவிடுமாறு பள்ளிவாசல் நிா்வாகத்தினரிடம் கேட்டுக்கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. பள்ளிவாசல் தரப்பினரை தொடா்புகொண்டு கேட்டபோது, திருவிழா சம்பிரதாய முறையில் சிறிய கம்பம் நிறுவப்பட்டது. எனினும் விழா நிகழாண்டு நடத்தப்போவதில்லை என்றனா்..
தகவல் : Karaikal online

கருத்துகள் இல்லை