புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 2000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
புதுச்சேரியில் கொரோனாவை முற்றிலும் தடுக்க 995 கோடி ரூபாய் ஒதுக்க மாண்புமிகு பிரதமருக்கு கடிதம். மாண்புமிகு முதல்வர் நாராயணசாமி தகவல்.
புதுச்சேரி சட்டப்பேரவை அன்று (30-03-2020) கூடியது. இடைக்கால பட்ஜெட்டை மாண்புமிகு முதலமைச்சர் திரு வே.நாராயணசாமி அவர்கள் தாக்கல் செய்தார்.
எப்ரல், மே, ஜுன் மாதங்களுக்கான ரூ.2042 கோடிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மேலும், புதுச்சேரியில் கொரோனா நோய் கட்டுப்படுத்துவதற்காக புதுச்சேரி அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சட்டப் பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தகவல் : Karaikal online
கருத்துகள் இல்லை